யாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை: நோயாளர்களுக்கு அழைப்பு

யாழ்.மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திர சிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் (23.09.2023) ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (இந்து விடுதி) இடம்பெறவுள்ளது.