பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் முதற்கட்டமாக 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா COVID – 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

Dr.த.சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்