World Kidney day celebration at Teaching hospital Jaffna.
The beneficiaries who benefitted from the Kidney diseases unit service told their stories. World Kidney Day celebration at Teaching Hospital Jaffna was a meaningful and impactful event, organized by nephrolgy unit in collaboration with JMA. By focusing on patients and their families, the event helped to humanize the experience of kidney disease, allowing their voices to shape the future of nephrology services. The event highlighted the progress of the unit, milestone events, and champion leaders showed the dedication and advancements made over the years. Stories from patients created an emotional connection to the work being done, reminding every one of …
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர் நட்புறவாளர் சேவைக்கு இணைந்திட அழைக்கிறோம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், யாழ்ப்பாண போதனா மருத்துவமனை மன்றத்தின் அனுசரணையுடன் நோயாளர் நட்புறவாளர் (Befriender) சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. நோயாளர் நட்புறவாளர் யார்? விசேட பயிற்சி பெற்ற சேவை வழங்குநர்கள் நோயாளிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவுபவர்கள் வைத்தியசாலை பணியாளர்களுடன் நோயாளிகளை இணைக்கும் பாலமாக செயற்படுபவர்கள் சிகிச்சை பெறும் போது நோயாளிகளுக்கு நேரும் அழுத்தங்களை குறைக்க செயற்படுபவர்கள் இந்த சேவையின் பயன்கள்: நோயாளிகள் தமது தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துகொள்ள உதவும் சுகாதார சேவைகளை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க வழிகாட்டும் நோயாளிகள் மனஅழுத்தம் குறைந்து விரைவாக குணமடைய உதவும் இணைய விரும்புகிறீர்களா? மேலும் தகவல்களுக்கு விளம்பரத்தை பார்வையிடவும். தொடர்பு கொள்ள: 0770024334 நோயாளிகளுக்கு ஆதரவாக, அவர்களின் நலனுக்காக – உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்! …
யாழ் போதனை வைத்தியசாலைக்கு புதிய கட்டில்கள் அன்பளிப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையின் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேற்று விடுதிக்கு 14 புதிய கட்டில்கள் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது. சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து, மேற்படி கட்டில்களை 18 ஆம் இலக்க மகப்பேற்று விடுதியில் வைபவரீதியாக கையளித்தார். போதனா வைத்தியசாலைக்கு மேலும் புதிய கட்டில்கள் மூலம் பழைய கட்டில்களை மாற்றீடு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. சிவபூமி அறக்கட்டளையின் ஊடாக இவ்வாறு கட்டில்களை போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதன் மூலம் நோயாளர் சேவை மேலும் வளமடையும். …
யாழ் போதனா வைத்தியசாலை – மகப்பேற்று விடுதி (இலக்கம் 18) புதிய இடத்தில் செயல்படுகிறது
இதுவரை 18ம் இலக்க மகப்பேற்று விடுதி வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக கட்டடத்துக்கு அண்மையில் செயல்பட்டுவந்தது. கடந்த திங்கட்கிழமை முதல், இது மருத்துவக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது என்பதை அறிவிக்கிறோம். மகப்பேற்று விடுதிகளில் தங்கி இருக்கும் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிட வருவோர் நுழைவாயில் 6 மூலம் வருகை தரலாம் என்பதைவும் அறியத் தருகிறோம். நன்றி, வைத்தியசாலை நிர்வாகம் …