யாழ் போதனா வைத்தியசாலையின் இடர் கால நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் போதனா வைத்தியசாலையின் வழமையான சேவைகள்.
……………………………………………………….
இடர் காலங்களில் மக்களின் நலன் FIRST!
இன்று யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து மூன்று முக்கிய இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னுரிமையுடன் வழங்கப்பட்டன. கீழே உள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன:
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை
யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை
யாழ் ஒஸ்மானிய கல்லூரி
மக்களின் உடல் நலத்தை உறுதிப்படுத்துவதற்காக:
வைத்தியர்கள், மருந்தாளர்கள், மற்றும் தாதியர்கள் ஆகியோர் தங்களின் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்று இந்த மருத்துவ முகாம்களை சிறப்பாக முன்னேற்றினர்.
மேலதிகமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்தும் சுகாதார சேவைகள்:நகரில் தங்கியிருக்கும் மக்களுக்கான சுகாதார சேவைகள், நாள்தோறும், யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்படும்.இவ்வாறு யாழ் போதனா வைத்தியசாலை முன்னெடுத்துள்ள இந்த சேவைகள், மக்களின் நலனை முதன்மையாகக் கருதியதன் சான்றாக அமைகின்றன.இதே சமயம் வெள்ளம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகின்றன.அண்மையில் பெய்த கடுமையான மழையினால் வைத்தியசாலையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. அப்பகுதியில் வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பகுதிகளில் சிகிச்சைகள் வழமைக்கு கொண்டுவரப்படும்.
இப்போது வெள்ள நிலைமை சீரடைந்து வருவதனால் நாளைய தொடக்கம் அனைத்து சேவைகளும் வைத்திய சாலையில் வழமை போன்று நடைபெறும்.
With a focus on precision and reliability, BWER offers state-of-the-art weighbridge systems to Iraq’s industries, meeting international standards and supporting operational efficiency.
4 Comments
toto slot
December 1, 2024 at 11:37 amgreat articletoto slot Terpercaya
truck scales in Mosul
December 5, 2024 at 7:09 amWith a focus on precision and reliability, BWER offers state-of-the-art weighbridge systems to Iraq’s industries, meeting international standards and supporting operational efficiency.
https://msrpen.com/
December 9, 2024 at 12:51 pmAmazing Post Broo!! Amazing Amazing!! Wait Your New Post Bro!!
JalaLive
December 9, 2024 at 12:55 pmJalaLive