உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் Corona தொற்று நோயானது இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்திலே சமூகத் தொற்று ஏற்படத்தொடங்கியதை தொடர்ந்து எமது மக்களை இத்தொற்று நோயிலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தொடர்பாக யாழ் போதனா வைத்;தியசாலை சுகாதாரதுறையினர் மிகவும் சிறப்பாக தங்கள் உயிரை பணயம் வைத்து கடமையாற்றினர். அந்த வகையில் கடமையாற்றியவர்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை தெரிவுசெய்து அவர்களை கௌரவிக்கும் முகமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr.S.Sridharan சுகாதார அமைச்சு அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்