கொரோனா நோய் (Covid – 19) தொற்றுதலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில்
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளமையால் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ பிணி
நிலையத்திற்கு (Medical Clinic) வருவதில் உள்ள சிரமம் காரணமாக பல நீண்ட கால தொற்றா
நோய்களிற்கு உள்ளான நோயாளிகள் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளனர்.

ஆனால் நீண்ட கால தொற்றா நோய்களுக்கு மருந்துகளை எடுக்காவிடின் அது பாதகமான
விளைவுகளை நோயாளிக்கு ஏற்படுத்தக்கூடும். இதனை தடுக்கும் முகமாக பரீட்சார்த்த முயற்சியாக
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ பிணி நிலையத்திற்கு (Medical Clinic) வாட்டு இலக்கம்
(Ward Number) 1, 2, 3, 4, 7, 8, 9, 10 ற்கு வருகை தரும் நோயாளர்கள் தமது மருத்துவ கிளினிக்
கொப்பியை கைவசம் வைத்துக்கொண்டு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை
எடுத்து தங்களது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், மருத்துவ பிணி நிலைய (Clinic)
இலக்கம் என்பவற்றை தெரிவிக்க வேண்டும்.

நாங்கள் உங்களுடைய மருந்துக்கொப்பிகளின் உதவியுடன் உங்களுக்கான மருந்துகளை பொதி
செய்து உங்கள் பிரதேச அல்லது அயலில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்போம். குறித்த
வைத்தியசாலையின் வசதிக்கேற்ப அவர்கள் உங்களுடைய வீடுகளிற்கு கொண்டுவந்து தருவார்கள்
அல்லது ஊரடங்கு தளர்த்தப்படும் போது நீங்கள் குறித்த வைத்தியசாலைக்குச் சென்று தங்களுடைய
மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இம் முதற்கட்ட பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிப்பின் நாங்கள் ஏனைய பிரதேசங்களிற்கும் இச்
சேவையைத் தொடர முடியும். இத்தொலைபேசி இலக்கத்திற்கு யாழ்போதனா வைத்தியசாலை
மருத்துவ பிணி நிலையத்திற்கு (Medical Clinic) வருகைதரும் நோயாளிகள் காலை 9 மணி முதல்
மதியம் 1 மணி வரை அழைப்பை மேற்கொள்ள முடியும்.

வருகின்ற 27/02/2020 வெள்ளிக்கிழமை தீவக பிரதேசத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளமையால்
தீவக பிரதேசத்திலிருந்து யாழ்போதனா வைத்தியசாலை மருத்துவ பிணி நிலையத்திற்கு (Medical
Clinic) வருகைதரும் மக்கள் மாத்திரம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தேவையான மருந்துகள்
கையிருப்பில் இல்லை எனில் அழைப்பை எடுத்து தங்களுடைய மருந்துகளை பெற்றுக்கொள்ள
முடியும்

தொலைபேசி இல : 021 222 2268