யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் எண்ணக்கருவில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வைத்திய கலாநிதி ரீ.கோபிசங்கர் (எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர், மற்றும் யாழ் மாவட்ட விளையாட்டு மருத்துவ அலகு ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் வழிகாட்டலில் இன்று (14.03.2020) காலை 6.30 மணிக்கு வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

இச் சைக்கிள் ஓட்டப்போட்டியில் எட்டு பிரிவுகளாக போட்டியாளர்கள் பங்குபற்றினர்
பிரிவு 1: 30 வயதிற்கு குறைந்த ஆண்கள், பிரிவு 2: 30 வயதிற்கு குறைந்த பெண்கள்,
பிரிவு 3: 31 – 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பிரிவு 4: 31 – 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள்,
பிரிவு 5: 41 – 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பிரிவு 6 : 41 – 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள்,
பிரிவு 7: 50 வயதிற்கு மேட்பட்ட ஆண்கள் , பிரிவு 8: 50 வயதிற்கு மேட்பட்ட பெண்கள்
இவ் 8 பிரிவுகளில் வைத்தியகலாநிதிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் என ஏறத்தாள 150க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.

இச்சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு காலை 10.00 மணியளவில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்ச்சிக் கல்லூரியில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு வைபவத்திற்கு பிரதம விருந்தினராக யாழ்.மருத்துவபீட பீடாதிபதி வைத்தியகலாநிதி எஸ்.ரவிராஜ் ஜயா அவர்களும் கௌரவ விருந்தினராக வைத்தியகலாநிதி ஏ.கேதீஸ்வரன் ஜயா (பணிப்பாளர் மாகாண சுகாதாரத்துறை) அவர்களும் விஷேட விருந்தினர்களாக திரு. பி.முகுந்தன் (பணிப்பாளர் மாகாண விளையாட்டுத்துறை) , திரு. வி.சி.பிரசாத் பெனான்டோ (யாழ்.காவல்துறை தலைமை ஆய்வாளர்) மற்றும் ஓய்வு பெற்ற வைத்திய நிபுணர் திருமதி கணேசமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இச் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு கேடயங்களும் மற்றும் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களையூம் ஊக்கப்படுத்தும் நோக்கில் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.