🏠 யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கும் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு (Self Isolation) உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
🏠 சுய தனிமைப்படுத்தப்படுத்தல் என்றால் என்ன?
ஒருவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு தன்னை வெளி ஆட்களிடம் இருந்தும் வீட்டில் வசிக்கும் மற்ற அங்கத்தவர்களிடம் இருந்தும் விலத்தி சொல்லப்பட்ட காலம் வரைக்கும் (நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்த நாளில் இருந்து 14 நாட்கள்) தனியாக இருத்தல் ஆகும்.
🏠 இதன் போது கடைப்பிடிக்க வேண்டியவை……
✅ வீட்டில் ஒரு அறையை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
✅ அறை யன்னல்களை திறந்து வைத்து நல்ல காற்றோட்டமாகவும் சூரிய ஒளியூட்டப்பட்டும் இருத்தல்.
✅ தினமும் நீங்கள் பாவிக்கும் அறையை கிருமிகொல்லி மருந்திட்டு கழுவவும்.
✅ உங்களால் முடிந்தளவு தூரம் மற்ற வீட்டு அங்கத்தவர்களிடம் (குறிப்பாக வயதானவர்களிடம்) இருந்து விலத்தி இருங்கள்.
✅ வீட்டு செல்ல பிராணிகளை உங்களுக்கு கிட்ட அனுமதிக்க வேண்டாம்.
✅ முடிந்தவரை முக கவசத்தை பாவியுங்கள். அப்படி பாவிக்காதவிடத்து இருமும் போது அல்லது தும்மும் போது ரிசு பேப்பர் (இல்லாதவிடத்து துணி) பாவித்து உடனடியாக குப்பை போடும் வாளியில் இட்டு வாளியை மூடிவிடவும்.
✅ அடிக்கடி (20 நிமிடத்திற்கு ஒருதடவை) கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவவும் அல்லது தொற்று நீக்கி பாவிக்கவும்.
✅ நீங்கள் பாவித்த பொருட்களை மற்றவர்கள் பாவிக்க அனுமதிக்க வேண்டாம். நீங்கள் சாப்பிட்டு மீதம் உள்ள உணவை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.
✅ உங்களுக்கென்று தனியாக பொருட்களை வைத்திருக்கவும் (துவாய், சோப், கோப்பை, கட்டில் போன்றவை)
✅ உங்களுக்கு வீட்டில் இருக்கும் அங்கத்தவர் உணவு தருவதாயின்,
✔ உணவு தருபவர் கை கவசம் முக கவசம் அணிதல் வேண்டும்.
✔ சாப்பாட்டை பார்சலாக கட்டி அதை உங்களுக்கான தட்டத்தில் வைத்துவிட்டு செல்ல வேண்டும்.
✔ இதன் போது உங்கள் இருவருக்கும் இடையில் குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளி வேண்டும். ✔ அவர் கதவை அடைத்து சென்ற பின்னரே நீங்கள் சாப்பாட்டை எடுக்க வேண்டும்.
✔ சாப்பாட்டை கொண்டு வந்து தந்தவர் உடனடியாக கை, கால், முகம் ஆகியவற்றை நன்கு சவர்க்காரமிட்டு கழுவுதல் வேண்டும்.
✅ முடிந்தால் தனியாக மலசலகூடத்தை வைத்திருக்கவும். அப்படி இல்லாவிடில் நீங்கள் பாவித்த பின்னர் அதனை நன்றாக கிருமிகொல்லி மருந்து போட்டு கழுவ வேண்டும்.
✅ நீங்கள் வீட்டுக்கு வெளியில் (கடைக்கு, வேலைக்கு, நண்பர்கள் உறவினர்களிடம், மத வழிபாட்டு தலங்கள், நிகழ்வுகளுக்கு) செல்லவோ அல்லது விருந்தினர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவோ வேண்டாம்.
✅ நீங்கள் வைத்திய சாலை செல்ல நேரிட்டால் ஆட்டோவிலோ அல்லது பொது வாகனத்திலோ செல்ல வேண்டாம்.
அம்புலன்சுக்கு அறிவித்து அல்லது உங்களிடம் தொடர்பில் உள்ள சுகாதார அல்லது பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தரின் வழிகாட்டலில் செயல்படவும்.
✅ கட்டாயம் முகக்கவசம் அணிந்து வைத்திய சலை செல்லவும்.
✅ வைத்தியசாலையில் நோயாளிகள் கூட்டத்துடன் வரிசையில் நிற்காமல் சுகாதார உத்தியோகத்தர் கூறிய வழிகாட்டலில் செல்லவும்.
✅ உங்கள் மேலதிக தகவலுக்கு 0719490094 அல்லது 0212222268 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
❗முறையாக கடைப்பிடிக்காத சுயதனிமைப்படுத்தலினால் நோய் பரவுவது அதிகரிக்கும்❗
Dr. இ.கௌதமன்